காணி கிளை அலுவலகம் மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைப்பு
மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கணி தொடர்பான தகவல்களை பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்வதற்கான சேவைகளை முன்னெடுக்கும் முகமாக UNHCR நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஜசாக் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் அமைக்கைப்பட்ட காணிக்கிளைக்கான கட்டிட திறப்பு விழா நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை மதியம் 3 மணியளவில் மன்னார் நகர் பிரதேச செயளாலர் திரு ம.பிரதீப் தலைமையில் இடம் பெற்றது
அதே நேரத்தில் குறித்த காணிக்கிளையின் ஊடாக எதிர் வரும் காலங்களில் மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள மக்களின் காணி ஆவணங்கள் பெறுதல் காணி வழங்குதல் வீட்டுத்திட்டம் தொடர்பான தேவைகளை நேரடியாக பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடதக்கது
மன்னார் நகர் நிருபர்
30.06.2020
காணி கிளை அலுவலகம் மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைப்பு
Reviewed by Author
on
June 30, 2020
Rating:

No comments:
Post a Comment