ஒரேநாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா..........
இந்தியாவில் ஒரேநாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 50 ஆயிரத்து 525 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் 716 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 812 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரையில், 9 இலட்சத்து 18 ஆயிரத்து 735 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் இந்த தொற்றுக்கு உள்ளான 4 இலட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், அவர்களில் 8 ஆயிரத்து 944 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது...

No comments:
Post a Comment