ஜனநாயக இடது சாரி முன்னணி கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளர்கள் இருவர் கட்சியில் இருந்து விலகல்.........
எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில்
போட்டியிடும் பிரபாகணேசன் தமைமையிலான ஜனநாயக இடது சாரி முன்னணியின்
மன்னார் மாவட்ட வேட்பாளர்களாக இலக்கம் 5 இல் போட்டியிடுகின்ற நிகேதன்
மற்றும் இலக்கம் 8 இல் போட்டியிடுகின்ற விக்னராஜா ஆகிய இரு வேட்பாளர்களும்
குறித்த கட்சியினுடைய கொள்கைகளும், கோட்பாடுகளும் ஏற்றுக் கொள்ள முடியாத
நிலையில் தாங்கள் இருவரும் குறித்த கட்சியில் இருந்து
வெளியேறிக்கொள்வதோடு, குறித்த தேர்தலின் போது தங்களுக்கு யாரும் வாக்களிக்க
வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-இவ்விடையம்
தொடர்பாக ஜனநாயக இடது சாரி முன்னணி கட்சி சார்பாக மன்னார் மாவட்ட
வேட்பாளர்களாக இலக்கம் 5 இல் போட்டியிடுகின்ற நிகேதன் மற்றும் இலக்கம் 8
இல் போட்டியிடுகின்ற விக்னராஜா ஆகிய இரு வேட்பாளர்களும் நேற்று
ஞாயிற்றுக்கிழமை(12) மதியம் மன்னாரில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தனர்.
இதன் போது அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,,
“ஜனநாயக இடது சாரி முன்னணி கட்சியின் கொள்கைகளும், கோட்பாடுகளும் ஏற்றுக்
கொள்ள முடியாத நிலையில் தாங்கள் இருவரும் குறித்த கட்சியில் இருந்து
வெளியேறுகிறேன்றோம்.
எனவே எங்களுக்கு வாக்களிக்க நினைக்கின்ற தமிழ் சொந்தங்கள் எங்களுடைய விருப்பு இலக்கங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.
ஏங்களுடைய இலக்கங்களை புறக்கணித்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அத்தோடு
எதிர் வரும் காலங்களில் மக்களின் நலனுக்காகத் தான் நாங்கள் இந்த கட்சியோட
ஒரு தூர நோக்குடன் ஆளும் கட்சியுடன் சேர்ந்து பயணிக்க ஒரு கட்சி என்ற
அடிப்படையில் தான் நாங்கள் இந்த கட்சிக்குள்ள நுழைந்தோம்.
-குறித்த
கட்சியினுள் துழைந்ததும் இவர்களினால் எங்களுக்கும் மக்களுக்கும் சரியான
ஒரு தீர்வு கிடைக்கும் என்பது எங்களுக்கு இது வரைக்கும் ஒரு உறுதியான
முடிவு கிடைக்கவில்லை.
-குறித்த கட்சியின்
வேட்பாளர் ஆகிய எங்களுக்கே ஒரு உறுதியான முடிவு கிடைக்கவில்லை.அந்த
அடிப்படையில் மக்களுக்கு இவர்கள் தீர்வு கொடுப்பார்கள் என்று எங்களுக்கு
நம்பிக்கை இல்லை.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா
பாதீப்பு நேரங்களில் மக்களுடைய அன்றாட உணவு தேவைகளுக்கான அத்தியாவசிய
பொருட்களை கட்சி பேதமில்லாமல் பல தனவந்தர்களும் கட்சிகளும் செய்து
கொண்டிருந்த காலப்பகுதியில் கூட ஒரு ரூபாய் கூட செலவழிக்க இந்த கட்சி
யோசித்தது.
காரணம் மக்களிடம் இருந்து வாக்குகளைப்
பெறுவது மட்டும் இவர்களுடைய எதிர் பார்ப்பாக இருக்கின்றதே தவிர மக்களுடைய
சிந்தனைகளுக்கும் மக்களுடைய துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் தோள்
கொடுக்கும் எந்த ஒரு நோக்கமும் இவர்களிடம் இல்லை.
அந்த ஒரு கருத்தை அடிப்படையாக கொண்டு நாங்கள் அவர்களுடன் ஒரு சில பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டோம்.
வன்னி
மக்கள் எங்களுடைய மக்கள். அவங்களுக்கு நாங்க செய்ய வேண்டும். கட்சி
நாளைக்கு தேர்தலில் வெற்றி பெறுவது அல்லது தோற்பது இரண்டாவது பட்சம்.
கட்சிக்குள்ள இருந்தோம் என்பதற்காக மக்களுக்கு உதவி செய்யவே நாங்கள்
கட்சிக்கு வந்தோம்.
-மக்களுக்கு எதாவது செய்ய
வேண்டும் என்கின்ற எமது உடன் பாட்டிற்கு அவர்கள் மக்களுக்கான சேவை உடன்பாடு
எதற்கும் அவர்கள் உடன் பட்டி வரவில்லை.
கடந்த
காலங்களில் எங்களுடைய மக்கள் ஒவ்வொரு காட்சிகளிலும் தேர்தல் காலங்களில்
ஏமாற்றப்பட்தே தவிர எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.
அந்த
ஏமாற்று வாளிகளாக இந்த கட்சியுடன் பயணிக்கின்ற நாங்களும் மாறிவிடக் கூடாது
என்ற ஒரு காரணத்தால் எங்கள நீங்க புறக்கணிக்க வேண்டும்.
-எங்களுக்கு
விழுகின்ற ஒவ்வொரு வாக்குகளும் அன்பான சொந்தங்கள் எங்களை ஆதரித்து
எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்குறுதி கொடுத்தவர்களுக்கு நன்றி.
ஒரு நல்ல தருணம் பார்த்து சரியான வாய்ப்புகள் வந்தால் உங்களுக்காக நான் ஏற்பாடு செய்து தருவேன்.
இந்த
கட்சியில் இனியும் தொடர்ந்து எங்களினால் பயணிக்க முடியாது என்ற ஒரு
காரணத்தால் நாங்கள் ஜனநாயக இடது சாரி முன்னணி கட்சியிலிருந்து விலகிக்
கொள்வதோடு, தேர்தலில் இருந்தும் ஒதுங்கிக்கொள்ளுகின்றோம்.” என அவர்கள் மேலும்
தெரிவித்தனர்...
ஜனநாயக இடது சாரி முன்னணி கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளர்கள் இருவர் கட்சியில் இருந்து விலகல்.........
Reviewed by Author
on
July 13, 2020
Rating:
No comments:
Post a Comment