வாகன விபத்தில் பெண் உட்பட மூவர் உயிரிழப்பு......
வெல்லவாய- புத்தள வீதியிலுள்ள வருணகம பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
வெல்லவாய பகுதியில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த லொறியும் புத்தளத்திலிருந்து வெல்லவாய நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தின்போது, முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட அதில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் வெல்லவாய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது சிகிச்சைப் பலனின்றி பெண் ஒருவரும் ஆண்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான மேலுதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்...

No comments:
Post a Comment