கருணா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாத ஒரு கையாலாகதவர் - கவீந்திரன் கோடிஸ்வரன்
கருணா அம்மான் அமைச்சராக இருந்த காலத்தில் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகளினால் சட்டவிரோத காணி அபகரிப்பு இடம்பெற்றதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக முதன்மை வேட்பாளராக போட்டியிடும் கவீந்திரன் கோடிஸ்வரனை ஆதரித்து கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கல்முனை பகுதியில் (வியாழக்கிழமை ) இரவு ஏற்பாடு செய்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ,”மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை புணானை வீதியை அண்டிய பகுதியில் முஸ்லீம் குடியிருப்புகள் காணப்படுகின்றன.வாகரைப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் முஸ்லீம் அரசியல்வாதிகளினால் கையகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
அவை அனைத்தும் தமிழர்களின் பூர்வீகக்காணிகள்.காயங்கேணி வாழைச்சேனையில் ஒரு பகுதி போய்விட்டது.புலி பாய்ந்தகல் செங்கலடி ஆரையம்பதி பகுதிகளிலும் இவ்வாறு காணிகள் பறிபோய்விட்டது...
இதற்கெல்லாம் காரணம் கருணா ஆட்சியில் இருந்தமை தான்.மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரின் சொந்த இடமான கிரான் பிரதேச சந்திவெளி பிரதேசத்தில் உள்ள வீதிகளின் நிலமைகளை சென்று பாருங்கள்.குட்டி சிங்கப்பூர் போன்ற தலைநகரங்களில் மாபெரும் அதிர்ச்சி அடைந்த ஒரு பிரதேசமாக அது காணப்படுகின்றது.
முஸ்லிம்களின் அரசியல் வாதிகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணரும் இவர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாத ஒரு கையாலாகதவர்.
ஒரு பக்கத்தில் இன்று இந்த கபட வேடதாரி...... அவர் அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினராக வந்தபோதுதான் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவான முஸ்லிம் அரசியல்வாதிகளின் அட்டகாசங்கள் அதிகரித்து” என குற்றஞ்சாட்டினார்.....
Reviewed by Author
on
July 10, 2020
Rating:


No comments:
Post a Comment