வதிவிட சான்றிதழ் வழங்க இலஞ்சம் - கிராம உத்தியோகத்தர் கைது
வணாத்தமுல்லை கிராம சேவை உத்தியோகத்தர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொட, கொழும்பு – 9 ஐ சேர்ந்த ஒருவரிடமே சந்தேக நபரான பெண் உத்தியோகத்தர் இலஞ்சம் கோரியிருந்தார். வதிவிட சான்றிதழை வழங்குவதற்காக நபரொருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா கையூட்டு பெற்ற சந்தப்பத்திலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் பெறும் நடவடிக்கையில் தரகராக செயற்பட்ட முச்சக்கரவண்டி
சாரதியொருவரும் இதன்போது கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் விசாரணை பிரிவு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.
சாரதியும் இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...
வதிவிட சான்றிதழ் வழங்க இலஞ்சம் - கிராம உத்தியோகத்தர் கைது
Reviewed by Author
on
July 28, 2020
Rating:

No comments:
Post a Comment