ரிஷாட் , மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்.........
வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் ரிஷாட் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இதுதொடர்பாக கருத்துவெளியிட்டுள்ள ரிஷாட் பதியூதீனின் ஆதரவாளர்கள், தமது கிராமத்தில் அரசியல்வாதிகளின் சுவரொட்டிகள் எவையும் ஒட்டுவதற்கு அனுமதியில்லாத நிலையில், மஸ்தானின் ஆதரவாளர்கள் கிராமத்திற்குள் சுவரொட்டிகளை ஒட்டமுனைந்த
போதே இந்த முரண்பாடு ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற இந்த மோதலில், பிரதேசசபை உறுப்பினர்
ஒருவர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா மற்றும் பூவரசங்குளம் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குழப்பநிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
ரிஷாட் , மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்.........
Reviewed by Author
on
July 28, 2020
Rating:

No comments:
Post a Comment