அமெரிக்காவில் நடந்த போராட்டங்களால்தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது - டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவில் இன மற்றும் நிற பாகுபாடுக்கு எதிராக நடந்த போராட்டங்களால்தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் 41 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி, பொலிஸுக்கு எதிராகவும் இனபாகுபாடுக்கு எதிராகவும் போராட்டம் நடத்திய பிளாக் லைவ்ஸ் மேட்டர் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களே கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.
விடுமுறை நாட்கள், மதுபானக் கடைகள், கடற்கரைகளில் மக்கள் அதிகம் கூடியதும் சுமார் 3 ஆயிரம் கிலோ மீற்றர் எல்லையை பகிர்ந்துகொள்ளும் மெக்சிகோவும் நோய் பரவலுக்கான காரணிகள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது...

No comments:
Post a Comment