அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை தடை...
அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு தடைசெய்யக்கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடி சூழலில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் வகையில் குறித்த பூமி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் தெரிவித்து டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் சாகெட் கோகலே என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில், நாட்டில் கொவிட்-19 வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துச் செல்கிறது எனவும், நாடு முழுதும் பல மாநிலங்களில் மீண்டும் ஊரடங்குகள் அமுல்படுத்தப்படுகின்ற நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி இவ்வாறு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த பூமி பூஜையை பிற்போட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பூமி பூஜை நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி இராமர் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டிவைக்கவுள்ளார். இந்நிகழ்வுக்கு மாநிலத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 250பேர் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால் பூமி பூஜையை தள்ளிவைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது...

No comments:
Post a Comment