சீனத் துணைத் தூதரகத்தை மூட அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு....
டெக்ஸாஸ்- ஹூஸ்டனில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை வெள்ளிக்கிழமைக்குள் மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை, வொஷிங்டனில் இருக்கும் சீனத் துணைத் தூதரகத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
வொஷிங்டனை இந்த முடிவை உடனடியாக இரத்து செய்ய அழைப்பு விடுத்தது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூவா சுனிங், தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சீனா நிச்சயமாக உறுதியான எதிர்விளைவுகளுடன் செயற்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுச் சொத்துகளை சீனா திருடுவதால் 72 மணித்தியாலத்திற்குள் ஹூஸ்டனில் உள்ள சீனத் துணைத் தூதரகம் மூடப்பட வேண்டுமென ட்ரம்ப் உத்தரவிட்டர்.
வர்த்தகப் போர், கொரோனா தொற்று, ஹொங்கொங் தொடர்பான சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவற்றியது உள்ளிட்ட பிரச்சனைகளில், அமெரிக்கா சீனா இடையேயான தொடர்ந்து பதற்றம் அதிகரித்துக் கொண்டு வருகிறமை மேலும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment