மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இரத்ததான முகாம்.
குறித்த
இரத்ததான நிகழ்வை இயக்குனர் செ.அன்ரன் அடிகளார் காலை 9 மணியளவில்
ஆரம்பித்து வைத்தார். மன்னார் பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின்
வைத்தியர்கள் தாதியர்கள் பணியாளர்கள் என பலர் இவ் இரத்ததான முகாமிற்கு தமது
முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளனர்.
குறித்த
இரத்ததான முகாமில் மன்னார் மறைமாவட்டத்தினை சார்ந்த குருக்கள்
அருட்சகோதரிகள் போன்றோரும், அரச அரச சார்பற்ற துறைசார் அலுவலர்கள்,
தன்னார்வம் கொண்ட மக்கள், மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள்,
கறிற்ராஸ்-வாழ்வதயத்தின் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டு சமூக
இடைவெளிகளை பின்பற்றி இரத்த தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இரத்ததான முகாம்.
Reviewed by Author
on
July 23, 2020
Rating:

No comments:
Post a Comment