பாகுபலி இயக்குனரையும் விட்டவைக்காத கொரோனா ........
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்களும் பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனரான ராஜமௌலிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அவர்,
“சில தினங்களுக்கு முன்பு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அது தானாகவே சரியாகிவிட்டாலும் நாங்கள் பரிசோதனை செய்து கொண்டோம். இன்று பரிசோதனை முடிவில் மிதமான கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் எங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்.
எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நன்றாக உள்ளோம். ஆனால் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும்,பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
பாகுபலி இயக்குனரையும் விட்டவைக்காத கொரோனா ........
Reviewed by Author
on
July 30, 2020
Rating:

No comments:
Post a Comment