வீதியில் நின்ற சிறுமிக்கு தொல்லை கொடுத்த ஐவர் கைது....
திருகோணமலை சீனக்குடாபொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவருக்கு கையைப் பிடித்து தொலைபேசி இலக்கதினை கொடுத்த கைகலப்பில் ஐவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று (26) உத்தரவிட்டார்.
சீனக்குடா, கப்பல்துறை, சர்தாபுர, பகுதிகளைச் சேர்ந்த 18 - 20 வயதுடைய ஐவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஐவரும் இணைந்து கப்பல்துறை பகுதிக்கு சென்றுள்ளனர், அங்கே வீதியில் நின்ற பதினைந்து வயதுடைய சிறுமியொருக்கு தொலைபேசி இலக்கத்தினை எழுதி கையைப்பிடித்து பெற்றுக்கொள்ளுமாறு திணித்துள்ளனர்.
இச்சம்பவத்தினை நேரில் கண்ட ஊர்வாசியொருவர் கூக்குரலிட்டு அனைவரையும் ஒன்று சேர்த்து சிறுமி நின்ற இடத்திற்குச் சென்று சந்தேக நபர்களிடம் விபரத்தினை கேட்க சந்தேக நபர்கள் ஊர்வாசிகளை தாக்கி விட்டு ஐவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேக நபர் ஐவரையும் பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது...
வீதியில் நின்ற சிறுமிக்கு தொல்லை கொடுத்த ஐவர் கைது....
Reviewed by Author
on
July 27, 2020
Rating:

No comments:
Post a Comment