கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு - ஒரு வருடத்திற்கு பிணை பெற முடியாது..
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் வகையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் காணொளி வெளியிடப்பட்டது. இந்த விடயம் இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கறுப்பர் கூட்டத்தின் நிர்வாகிகளான செந்தில் வாசன், சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகர பொலிஸ் ஆணையாளர் மகேஷ்குமார் உத்தரவின்பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாகவிமர்சித்த இந்து தமிழர் பேரவையின் கோபால் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருப்பதால் அவர்கள் இருவரும் ஒரு வருடத்திற்கு பிணை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு - ஒரு வருடத்திற்கு பிணை பெற முடியாது..
Reviewed by Author
on
July 28, 2020
Rating:

No comments:
Post a Comment