வாகன விபத்தில் தம்பதியர் உட்பட மூவர் உயிரிழப்பு .....
நேற்று (27) மாலை 6.50 மணியளவில் கெலிஓய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் நடந்து சென்ற பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மோதியதில் பாதையில் விழுந்த பாதசாரியின் மீது பின்னால் வந்த முச்சக்கரவண்டி ஒன்று மோதி பின்னர் குறித்த முச்சக்கரவண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்துடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்கள் இருவர் கம்பளை வைத்தியசாலையிலும், பாதசாரி மற்றும்
முச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற மற்றமொரு நபரும் கண்டி
வைத்தியசாலையிலும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பேராதெனிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலம்பொட பகுதியை சேர்ந்த 54 மற்றும் 53 வயதான தம்பதினர் மற்றும் கெலிஓய பகுதியை சேர்ந்த 54 வயதுடைய பாதசாரி இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பேராதெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது....
வாகன விபத்தில் தம்பதியர் உட்பட மூவர் உயிரிழப்பு .....
Reviewed by Author
on
July 28, 2020
Rating:

No comments:
Post a Comment