காலமான மத்தியப்பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் ..!!
மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் தனது 85ஆவது வயதில் காலமாகியுள்ளதாக அவரது மகன் அசுதோஷ் தாண்டன் ருவிற்றர் பதிவில் அறிவித்துள்ளார். இவர், சுவாசப் பிரச்சினை மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், லக்னோவைச் சேர்ந்த டாண்டன், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவர் என்பதுடன் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்தார். இந்நிலையில் கடந்த ஓராண்டாக மத்தியப் பிரதேச ஆளுநராக அவர் பதவி வகித்து வந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் லால்ஜி டாண்டன் என அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது....

No comments:
Post a Comment