நெதர்லாந்து ஹெலிகொப்டர் விபத்து..!!
நெதர்லாந்தின் அருபா தீவுக்கு அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்து குறித்து, அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதனை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடலோர காவல்படைக்குச் சொந்தமான என்ஹெச் 90 ஹெலிகொப்டர் அருபா தீவுக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகொப்டரை ஓட்டிச் சென்ற விமானி 34 வயதான கிறிஸ்டியன் மார்டென்ஸ், 33 வயதான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எர்வின் வார்னீஸ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இருவரும் லெப்டினன்ட் நிலையிலான அதிகாரிகளாவர். மேலும், குறித்த ஹெலிகொப்டரில் இவர்களுடன் பயணித்த மேலும் இருவர் லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர்..
இந்நிலையில் இந்த விபத்தினால், தான் அதிர்ச்சியடைந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்ததாகவும் பிரதமர் மார்க் ருட்டே தெரிவித்துள்ளார்.
மேலும், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்பத்துக்கு நெதர்லாந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் அன்க் பிஜ்லெவெல்ட் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் விபத்து தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது. மேலும் அறிவிப்பு வரும் வரை அனைத்து டச்சு என்ஹெச்90 ஹெலிகொப்டர்களும் பறக்க அனுமதிக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்...

No comments:
Post a Comment