துப்பாக்கி பிரயோகத்தால் 6 பயங்கரவாதிகள் உயிரிழப்பு.............
அருணாச்சல பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 6 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
அருணாச்சல பிரதேசம் லாங்டிங் மாவட்டம் நிகினு கிராமத்தின் அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது வனப்பகுதிக்குள் குடிசை அமைத்து தங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது என்.எஸ்.சிஎன்-ஐஎம் அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பயங்கரவாதிகள் பயன்படுத்திய 4 ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், சீன துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது....
Reviewed by Author
on
July 11, 2020
Rating:


No comments:
Post a Comment