மலேசியாவில் இந்தியர்கள் உள்பட 28 வெளிநாட்டினர் மீட்பு .
மலேசிய: Kedah மாநிலத்தில் இருக்கும் Kulim மாவட்டத்தில் மனித கடத்தலில் சிக்கியவர்களாக கருதப்பட்ட 28 வெளிநாட்டினரை மலேசிய காவல்துறை மீட்டுள்ளது. இவர்களில் 8 பேர் இந்தியர்கள், 7 பேர் பாகிஸ்தானியர்கள், 13 பேர் வங்கதேசிகள் என அறியப்பட்டுள்ளது. இவர்களிடம் முறையான பயண ஆவணங்களும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் அழைத்து வரப்பட்டிருந்த இவர்கள் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்த இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மலேசியாவின் Kulim மாவட்டத்தில் உள்ள Padang Serai பகுதியில் இருக்கும் வீடொன்றில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 28 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
“முதற்கட்ட விசாரணையில் இவர்கள் கோலாலம்பூரில் இருந்து அழைத்து வரப்பட்டு, கட்டாய உழைப்பிற்காக வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட வைக்கப்பட்டிருந்திருக்கின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது,” என Kedah குற்றப் புலனாய்வு துறையின் தலைமை அதிகாரி சபி அகமது தெரிவித்திருக்கிறார்.
இத்தேடுதல் வேட்டையின் 28 வெளிநாட்டினரையும் வைத்துள்ள வீட்டினை கவனித்த வந்த நபர் நான்கு சக்கர் விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பியோடி விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் கைதான 28 வெளிநாட்டினரும் Kulim மாவட்ட காவல்துறை வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக ஆட்கடத்தல் தடுப்புச் சட்டம், குடியேறிகள் கடத்தலை தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

No comments:
Post a Comment