பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.....
பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை அரசாங்கம் பெற்றுக்கொள்வதை தடுப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “அரசாங்கத்தின் பெரும்பான்மையை தடுப்பதில் கவனம் செலுத்தியதன் மூலம், தற்போதைய எதிர்க்கட்சி பொதுத் தேர்தலில் வெற்றி பெறாது என்பதை ஒப்புக் கொண்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டுள்ளதால், ஸ்ரீலனாக பொதுஜன பெரமுன தேர்தலில் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.
எதிர்க்கட்சியின் இந்த நடவடிக்கைகள் மூலம் தேர்தல் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்..

No comments:
Post a Comment