தாமரை மொட்டு அரசாங்கம் மக்களிடமிருந்து பணத்தை கொள்கையடிக்கிறார்கள் - ரணில் விக்ரமசிங்க
8 மாதங்களாக எதனையும் சாதித்துவிடாத அரசாங்கம், அடுத்த 5 வருடங்களுக்கு எதனை புதிதாக சாதித்துவிடப் போகிறது என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
களுபோவில பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தாமரை மொட்டு அரசாங்கம் இன்று எதனை செய்கிறது? மக்களிடமிருந்து பணத்தை கொள்கையடிக்கிறார்கள்.
மின்சாரக் கட்டணத்தைக்கூட மூன்று மடங்காக அதிகரித்து, அதனை செலுத்துமாறு கூறுகிறார்கள். மக்களிடம் பணம் இல்லாமல், எவ்வாறு செலுத்துவார்கள்? சில நாடுகளில் கொரோனா காலத்தில் மக்களுக்கு பணத்தை கொடுக்கிறார்கள்.
ஆனால், இலங்கையிலோ அது தலைகீழாக இடம்பெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் சாதிக்காத இந்த அரசாங்கம், அடுத்த 5 வருடங்களில் எதனை சாதிக்கப் போகிறது என கேட்க விரும்புகிறேன். இவற்றை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்...

No comments:
Post a Comment