வரலாறுகளை திரிவு படுத்தும் செயல் பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது - தமிழ் தேசிய.சைவ மக்கள் கட்சியின் தலைவர் மனோ ஐங்கரசர்மா கடும் கண்டனம்...
நாயன்மார்களினால் தேவாரப் பதிகம் பாடப்பெற்ற பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான திருக்கோணேச்சர ஆலயம் தொடர்பில் தேரர் மற்றும் உலமாகட்சி தலைவர் ஆகியோரின் கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய சைவ மக்கள் தெரிவித்துள்ளது..
இது தொடர்பாக கட்சியின் தலைவர் மனோ.ஐங்கரசர்மா கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்..
இது தொடர்பாக.அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
கோணேஸ்வரர் ஆலயம் பௌத்த விகாரைக்கு மேலாக கட்டப்பட்டுள்ளது என்று தேரர் கூறிய கருத்து ஒட்டுமொத்த இந்துக்களையும் பாதித்துள்ளது.அதே வேளை
இந்த பிரச்சினை அடங்குவதற்குள் இராவணன் முஸ்லிம் மன்னன் என்று புது சர்ச்சை வெடித்துள்ளது.
இது தொடர்பில் உலமாக் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக வந்த அறிக்கை தொடர்பில் நாம் எமது வன்மையான கண்டனத்தினை தெரிவிப்பதாகவும் சமயரீதியான விதண்டாவாத தன்மைகளை தோற்றுவித்து வரலாறுகளை திரிவு படுத்தும் செயல் பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.....
வரலாறுகளை திரிவு படுத்தும் செயல் பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது - தமிழ் தேசிய.சைவ மக்கள் கட்சியின் தலைவர் மனோ ஐங்கரசர்மா கடும் கண்டனம்...
Reviewed by Author
on
July 11, 2020
Rating:

No comments:
Post a Comment