யாழ். பல்கலைக்னழக்கின் புதிய பீடாதிபதி தெரிவு ........
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் புதிய பீடாதிபதியாக பேராசிரியர் பாலசுந்தரம் நிமலதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடச் சபையில் அவர் இன்று தெரிவு செய்யப்பட்டார். கணக்கியல் துறை பேராசிரியரான இவர், 38ஆவது வயதில் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திறந்த மற்றும் தொலைக் கல்வி அலகின் பணிப்பாளரும் கணக்கியல் துறையின் பேராசிரியருமாக பாலசுந்தரம் நிமலதாசன், மிகக் குறைந்த வயதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் பேராசிரியராகத் தெரிவாகியவர்களில் ஒருவராகவும் விளங்குகிறார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிக பட்டதாரியான அவர், ராஜரட்ட பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாகவும் பங்களாதேஷ் சிட்டாக்கோங் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் நிறைவு செய்தவர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2005ஆம் ஆண்டு விரிவுரையாளராக தனது ஆசிரியர் பணியை ஆரம்பித்த பாலசுந்தரம் நிமலதாசன், 2010ஆம் ஆண்டில் முதுநிலை விரிவுரையாளராகவும் 2015ஆம் ஆண்டில்
பேராசிரியராகவும் திகழ்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment