கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்....
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலையில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 309 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
லெபனான் பெய்ரூட் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 1506 எனும் விமானத்தின் ஊடாக 245பேர் இன்று காலை 7.30 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதேவேளை அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த Etihad விமான சேவைக்கு சொந்தமானEY 264எனும் விமானத்தின் ஊடாக 40 இலங்கையர்கள் நேற்று இரவு 11.35 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அதேபோன்று கட்டார்- தோஹா நகரில் இருந்து பயணித்த இரண்டு விமானங்கள் ஊடாக 11 இலங்கையர்களும் இந்தியாவின் மும்பை
நகரில் இருந்து பயணித்த ஶ்ரீலங்கன் விமானசேவைக்கு சொந்தமான யு. எல் 1042 எனும் விமானம் ஊடாக 13 இலங்கையர்களும் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது....

No comments:
Post a Comment