தலைமன்னார் புனித.லோறன்சியார் ஆலயத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
நேற்று 10.08.2020 திங்கள் கிழமை அன்று காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் தலைமன்னார் பங்கின் தாய்க் கோயிலான புனித லோறன்சியார் ஆலயத் திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
ஆயர் தமது மறையுரையிலே ஆலயத்தின் மிகவும் பழமையான பாரம்பரிய வரலாற்றை இறைமக்களுக்கு எடுத்துரைத்தார். புனித லோறன்சியாரின் வாழ்க்கை சரித்திரத்தை விளங்கப்படுத்தி, திருஅவையில் மறைசாட்சிய தியாகத்தின் ஊடாக நீண்ட பாரம்பரிய கிறிஸ்தவ விசுவாச வரலாற்றைக் கொண்டுள்ளோம். துன்பமும் இன்பமும் இரண்டு வெவ்வேறு துருவங்கள் அல்ல மாறாக துன்பத்தை ஏற்பதன் மூலம் கிறிஸ்தவ வாழ்வின் உண்மையான மகிழ்வின் உயர்வை அடைகின்றோம். போன்ற பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
தலைமன்னார் பங்குத்தந்தை அருட்பணி. அகஸ்ரின் புஸ்பராசா பங்குச் சமூகத்தின் முழுமையான ஆதரவோடு அனைத்து ஒழுங்குகளையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
தலைமன்னார் புனித.லோறன்சியார் ஆலயத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
Reviewed by Author
on
August 11, 2020
Rating:

No comments:
Post a Comment