அண்மைய செய்திகள்

recent
-

கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமைத் திறக்கும் ஆஸ்திரேலியாவின் முடிவு............

 

ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிற்கு வெளியே உள்ள கிறிஸ்துமஸ் தீசு தடுப்பு முகாமைத் திறக்கும் ஆஸ்திரேலிய அரசின் முடிவு தஞ்சக்கோரிக்கையாளர்களை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தும் அரசியல் ரீதியான பிரசார செயல் என முன்னாள் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதியும் குர்து பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி விமர்சித்துள்ளார். 


முன்பு, மனுஸ் தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த இவர் ஜூலை 2019 நியூசிலாந்து பயணத்திருந்த நிலையில் சமீபத்தில பூச்சானியின் தஞ்சக்கோரிக்கை  நியூசிலாந்தில் ஏற்கப்பட்டுள்ளது. 


2013ம் ஆண்டு ஒரு மாதக் காலம் கிறிஸ்துமஸ் தீவில் வைக்கப்பட்டிருந்த பூச்சானி, பின்னர் மனுஸ்தீவில் 6 ஆண்டுக்காலம் தடுப்புக் காவல் வைக்கப்பட்டிருந்தார். 


இந்த சூழலில், கிறிஸ்துமஸ் தீவு முகாம் திறப்பினை விமர்சித்திருக்கும் பூச்சானி, மீண்டும் அகதிகளும் தஞ்சக்கோரிக்கையாளர்களும் அங்கு சிறைவைக்கப்படுவதை எண்ணிப் பார்ப்பதற்கே கடுமையானதாக இருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார். 


ஆஸ்திரேலியாவிலிருந்து 1500 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் அமைந்திருக்கும் இத்தீவில் உள்ள முகாம் திறக்கப்படுவதன் மூலம் ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள இட நெருக்கடி பிரச்னையை சமாளிக்க 

இயலும் என ஆஸ்திரேலிய எல்லைப்படை கருதுகின்றது. 


“ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள இட நெருக்கடி 

அழுத்தத்தை சமாளிக்க, தடுப்பில் உள்ளவர்கள் தற்காலிகமாக கிறிஸ்துமஸ் தீவின் North West Point-ல் உள்ள குடியேற்ற 

தடுப்பு முகாமிற்கு வரும் வாரங்களில் மாற்றப்படுவார்கள்,” என ஆஸ்திரேலிய எல்லைப்படை பேச்சாளர் 

தெரிவித்திருந்தார். கடந்த அக்டோபர் 2018ல் ஆஸ்திரேலிய அரசால் மூடப்பட்ட North West Point தடுப்பு மையம், 2019ம் ஆண்டில் திறக்கப்பட்ட போதும் அங்கு எவரும் சிறைவைக்கப்படவில்லை. 


கிறிஸ்துமஸ் தீவு உண்மையான சிறை,” எனக் குறிப்பிட்டுள்ள பூச்சானி, “பிரசாரத்திற்காக 2019ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு இம்மையத்தை திறந்தனர். இப்போது அதனை மீண்டும் செய்கின்றனர். இந்த அரசியல் பிரசாரத்தில் பாதிக்கப்பட இருக்கிறவர்கள் அகதிகள்,” என அவர் தெரிவித்திருக்கிறார்.  

 


கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமைத் திறக்கும் ஆஸ்திரேலியாவின் முடிவு............ Reviewed by Author on August 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.