அண்மைய செய்திகள்

recent
-

தற்காலிக விசா கொண்ட இந்தியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் நுழைய பயண விலக்கு....

கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள உடல்நலப் பாதிக்கப்பட்ட தனது குடும்ப உறுப்பினரைக் கவனித்துக் கொள்ள ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியிருந்த 31 வயது சய்தரா சங்கர், கடந்த மார்ச் 20ம் தேதி கொரோனா சூழல் காரணமாக ஆஸ்திரேலிய எல்லைகள் மூடப்பட்டதால் ஆஸ்திரேலிய திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. 


இந்த தடைக்காலத்தில் ஆஸ்திரேலியாவில் குடியுரிமைக் கொண்டவர்களும் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமைக் கொண்டவர்களும் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசா பெற்ற சய்தரா சங்கர் ஆஸ்திரேலியா திரும்ப அனுமதிக்கப்படவில்லை. 


தனது கணவனிடமிருந்து நான்கு வயது மகனிடமிருந்தும் பிரிந்திருப்பதை சுட்டிக்காட்டி 15 முறைகள் ஆஸ்திரேலியா திரும்ப விண்ணப்பதிருந்தேன். ஆனால், ஒவ்வொரு மூறையும் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது,” எனத் தெரிவித்துள்ள சய்தராவுக்கு (மெல்பேர்னில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றும்) கணவரின் நிறுவனம் மூலம் ஆஸ்திரேலியா திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 


நான் எனது கணவரின் நிறுவனத்தை தொடர்புக் கொண்டேன். அவர்கள் மிக உதவாக இருந்தார்கள், நான் ஆஸ்திரேலியா திரும்புவது எவ்வளவு அவசியமானது என கடிதம் வழங்கியிருந்தனர்,” எனக் கூறியுள்ளார் சய்தரா.  எங்களது குழந்தையை கவனித்துக் கொள்வதன் மூலம் எனது கணவர் சிறப்பாக வேலை செய்ய முடியும்  என நிறுவனத்தின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக சய்தரா தெரிவித்திருக்கிறார். 

இதையடுத்து, இந்திய பெண்ணான சய்தரா  ஆஸ்திரேலியாவுக்கு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


கடந்த மார்ச் 20ம் தேதி முதல் ஜூன் 18 வரை, குடியுரிமை அல்லாத ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய கருணையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஆஸ்திரேலிய உள்துறைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தற்காலிக விசா கொண்ட இந்தியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் நுழைய பயண விலக்கு.... Reviewed by Author on August 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.