யாழ் சங்குபிட்டி கோர வீதி விபத்தில் நேற்றைய தினம் உயிரிழந்தவர் 4 பிள்ளைகளின் தாயான முன்னாள் பெண் போராளி மீரா!
நேற்றைய சங்குபிட்டி கோர வீதி விபத்தில் உயிரிழந்தவர் 4 பிள்ளைகளின் தாயான, முன்னாள் பெண் போராளி மீரா (வயது 47) என அடையாளங்காணப்பட்டுள்ளார்.
யாழ்.சாவகச்சேரி – தனங்களப்பு – அறுகுவெளி – ஐயனார்கோவிலடியில் நேற்று இடம்பெற்ற டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் முன்னாள் போராளியான குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
ஒரு காலை போரில் இழந்த நிலையில் வாழ்க்கையில் போராடி வாழ்ந்த பெண், மோட்டார் சைக்கிளில் பயணித்த உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய முன்னாள் போராளியான துசாந்தி என்ற பெண்ணே உயிரிழந்தவராவார்.
முன்னாள் போராளியான குறித்த குடும்பப் பெண் ஒரு காலை இழந்தநிலையில் செயற்கைக் கால் பொருத்தியுள்ளார்.
பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment