நடிகைகளின் மொபைல் போன்கள் பறிமுதல்..! என்சிபி அதிரடி..!
“தீபிகா, கரிஷ்மா, ராகுல் மற்றும் கம்பட்டா ஆகியோரின் தொலைபேசிகளை இந்திய ஆதாரச் சட்டத்தின் கீழ் என்சிபி கைப்பற்றியுள்ளது” என்று ஒரு என்சிபி அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று தீபிகா மற்றும் கரிஷ்மாவையும், வெள்ளிக்கிழமை ராகுல் மற்றும் கம்பட்டாவையும் பல மணி நேரம் விசாரித்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே தொலைபேசிகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் குறித்த உரையாடல்களை மேற்கொண்டதாகக் கூறப்படுவதால் என்சிபி அவர்களின் தொலைபேசிகளை பறிமுதல் செய்தது.
சுஷாந்தின் முன்னாள் மேலாளர் ஜெயா சஹாவின் தொலைபேசியையும் என்சிபி பறிமுதல் செய்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தீபிகா, ராகுல், கம்பட்டா மற்றும் கரிஷ்மா ஆகியோரைத் தவிர, பாலிவுட் நடிகர்களான ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலிகான் ஆகியோரையும் நேற்று பல மணி நேரம் விசாரித்ததாக என்.சி.பி. கூறியுள்ளது.
நடிகைகளின் மொபைல் போன்கள் பறிமுதல்..! என்சிபி அதிரடி..!
Reviewed by Author
on
September 28, 2020
Rating:

No comments:
Post a Comment