போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை உருவாக்கப்பட்ட 200 ஆண்டு நிறைவு விழா மடு திருத்தலத்தில் அனுஸ்ரிப்பு-
மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ மற்று அமலமரிதியாகிகள் சபையின் யாழ்மாகாண முதல்வர் எட்வின் வசந்தராஜ் திருக்குடும்ப சபையின் துணைக்குருக்களான அருட்தந்தை நிக்கலஸ் ,ரஞ்சித் அன்ரனி தலைமையில் ஏனைய துனை குருக்களின் பங்குபற்றுதலுடன் கூட்டுத்திருப்பளியாக இரு மொழிகளிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
போர்டோவின் திருக்குடும்ப சபை உருவாக்கப்பட்ட 200 ஆண்டு நிறைவு செய்யப்படுவதுடன் மூன்றாம் நூற்றாண்டில் வெற்றிகரமாக கால்பதித்து தங்களுடைய நோக்கத்தை தொடர்ந்தும் நிறைவேற்ற மூன்றாம் நூற்றாண்டி கால்பதிக்கின்றோம் என்ற தொணிப் பொருளில் நன்றியின் விழாவாக ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தனர்.
குறித்த நிகழ்வில்
வடமாகாணம் மற்றும் தென் மாகணத்தை சேர்ந்த திரு குடும்பத்தவர்கள் முறையே அப்போஸ்தலிக்க அருட் சகோதரிகள், தியான யோக சகோதரிகள், திருமடசார்பற்ற சகோதரிகள் ,பொது நிலையினர், துணைக்குருக்கள், திருகுடும்ப இளைஞர்கள், சிறுவர்கள், பங்கேற்றதுடன் விசேட நடை பவனியூடாக மடு அன்னை ஆலயத்திற்குள் வருகை தந்து நன்றி திருப்பலியில் இணைந்து இறைவனக்கு நன்றி செலுத்தினர்.
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை உருவாக்கப்பட்ட 200 ஆண்டு நிறைவு விழா மடு திருத்தலத்தில் அனுஸ்ரிப்பு-
Reviewed by Author
on
September 19, 2020
Rating:

No comments:
Post a Comment