மக்கள் தூரநோக்கோடு சிந்தித்து வாக்களிக்காதமையே நாட்டுக்கு இன்று இந்த நிலைமை- சஜித்
அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “நாம் 20ஆவது திருத்தச்சட்டத்தை என்றும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இதனை தோற்கடிக்க தேவையான அனைத்து ஜனநாயக வழிமுறைகளையும் மேற்கொள்வோம்.
மக்கள் இதற்காக அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை. எனினும், அரசாங்கம் இதனை மறந்துதான் தற்போது செயற்பட்டு வருகிறது. எவ்வாறாயினும், எதிர்க்கட்சி எனும் ரீதியில் நாம் 20 இற்கு எதிராக எம்மால் முடிந்த அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்வோம்.
அத்தோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பயணம் தற்போது உறுதியாகவுள்ளது. இந்தப்பயணத்தில் யார் வேண்டுமானாலும் இணையலாம்.
எமது கதவுகள் திறந்து தான் காணப்படுகிறது.
ஐக்கிய நாட்டுக்குள் பௌத்தத்திற்கு முன்னுரிமைக் கொடுத்து, அதேநேரம் ஏனைய மதங்களுக்கும் சம உரிமைக் கொடுத்து ஓர் ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.
ஐக்கிய மக்கள் சக்தி என்பது மிகவும் புதியக் கட்சியாகும். பொதுத் தேர்தலின்போது எமக்கு சரியான முறையில் அமைப்பாளர்கள்கூட இருக்கவில்லை.
இந்த நிலையில்தான் இவ்வாறான வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளோம்.
தற்போதுதான் கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று உள்ளார்கள். இது உண்மையில் புரட்சி என்று தான் கூறவேண்டும்.
இப்படியான எமது பலத்தை பயன்படுத்தி 20 இற்கு எதிராக மட்டுமன்றி, சுற்றாடல் அழிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட அனைத்துக்கு எதிராகவும் செயற்படுவோம்.
மக்கள் கொஞ்சம் தூரநோக்கோடு சிந்தித்து வாக்களித்திருந்தால், அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்காது.
எவ்வாறாயினும், எதிர்க்கட்சி எனும் ரீதியில் நாம் அனைத்து மக்களுக்காகவும் செயற்படுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தூரநோக்கோடு சிந்தித்து வாக்களிக்காதமையே நாட்டுக்கு இன்று இந்த நிலைமை- சஜித்
Reviewed by Author
on
September 21, 2020
Rating:

No comments:
Post a Comment