அண்மைய செய்திகள்

recent
-

10 கிராமங்களை காப்பாற்றிய கார்த்தி…

நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்காக உதவி வருகிறது. அதுபோல் அவரது சகோதரர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

 ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல விவசாயிகளுக்கு உதவி செய்துள்ள உழவன் பவுண்டேஷன் தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் என்ற பகுதியில் உள்ள சூரவள்ளி கால்வாயை சுத்தப்படுத்தி வருகிறது.

 கிட்டத்தட்ட பதிமூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த கால்வாய் முழுவதும் செடிகொடிகளாகவும் புதர்களாகவும் இருக்கும் நிலையில் இந்த கால்வாயை சுத்தப்படுத்த ரூபாய் 4 லட்சம் உழவன் பவுண்டேஷன் செலவு செய்து உள்ளது.

 கடந்த 21 நாட்களாக இந்த கால்வாயை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் இந்த பணி முடிந்து விட்டால் ராதாபுரம் பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் என்பது மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள 10 கிராமத்தில் உள்ள பொதுமக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் கார்த்தியின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

10 கிராமங்களை காப்பாற்றிய கார்த்தி… Reviewed by Author on September 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.