பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் கொழும்பிற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டார்.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காகவே இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்பு வாக்கினைப்பெற்று பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டார்.
2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மரியால் தேவாலயத்தில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் கொழும்பிற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
Reviewed by Author
on
September 21, 2020
Rating:

No comments:
Post a Comment