அனுஷ்காவின் சைலன்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 4 இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் படமாக சைலன்ஸ் தயாராகி உள்ளது. ஷெனியல் டியோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்திஜெயந்தி அன்று சைலன்ஸ் வெளியாக் உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
அதே தினத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படமும் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அனுஷ்காவின் சைலன்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Reviewed by Author
on
September 19, 2020
Rating:

No comments:
Post a Comment