வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் இணையத்தளம் அறிமுகம்
சங்கத்தின் உபதலைவர் செல்லத்துரை சபாநாதன் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட கணபதிசித்தர் மு.க.கந்தசாமிக் குருக்கள் இணையத்தளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
இணையத் தளத்திற்கான அறிமுகவுரையை ஆரியர்வாண்மை விருத்திநிலைய முகாமையாளர் சு.ஜெயச்சந்திரன் நிகழ்த்தியிருந்தார்.
அந்தவகையில் www.vavuniyaymha.org என்ற இணையத்தளத்தின் மூலம் சங்கத்தின் செயற்பாடுகளை அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.
நிகழ்வில், விருந்தினர்களாக சிவஶ்ரீ க.கந்த கணேசதாசக் குருக்கள், சங்கத்தின் செயலாளர் தே.அமலன், நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராயா மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள், ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்தனர்
.
.
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் இணையத்தளம் அறிமுகம்
Reviewed by Author
on
September 20, 2020
Rating:

No comments:
Post a Comment