அண்மைய செய்திகள்

recent
-

வெற்று குமிழ்முனை எழுதுகோல் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழட்சி வேலைத்திட்டம்...

பாவனையின் பின் ஒதுக்கப்படும் வெற்று குமிழ்முனை எழுதுகோல் குழாய்கள் (Ballpoint Pens) மற்றும் பற்தூரிகைகள் (Toothbrushes) மீள் சுழட்சி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சும் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் இணைந்து ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு - ‘சட்டம் அல்ல; இது ஒரு ஒழுக்கம்’ என பெயரிடப்பட்டுள்ளது. 

 அதற்காகத் தயாரிக்கப்பட்ட முதலாவது கொள்கலன் நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித்திட்டம் “நாம் வளம்பெற்று நாட்டை வளப்படுத்துவோம்“ என பெயரிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு பாடசலைகளில் இருந்து ஒதுக்கப்படும் குமிழ்முனை எழுதுகோல் குழாய்கள் சுமார் 80 கிலோ கிராம்களாகும். 

 இது, வருடமொன்றுக்கு 29,000 கிலோவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து ஒதுக்கப்படும் அளவு இதுவரையில் கணக்கிடப்படவில்லை. பாவனையின் பின்னர் ஒதுக்கப்படும் குமிழ்முனை எழுதுகோல்கள் மற்றும் பற் தூரிகைகள் உக்குவதற்கு 100 முதல் 500 வருடங்கள் செல்வதாகச் சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

 அனைத்து பாடசாலைகளுக்கும் இந்த பிரத்தியேக கொள்கலன்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ”வெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிளாஸ்டிக்” நிறுவனம் இவற்றை கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களும் நடைமுறைப்படுத்துவதைக் கட்டாயமாக்குவதற்காக - அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதனை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

வெற்று குமிழ்முனை எழுதுகோல் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழட்சி வேலைத்திட்டம்... Reviewed by Author on October 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.