அண்மைய செய்திகள்

recent
-

தேசிய கொடி மற்றும் பௌத்த கொடிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இராஜாங்க அமைச்சு நடவடிக்கை:

நாட்டின் தேசிய கொடி மற்றும் பௌத்த கொடி ஆகியவற்றின் தேவையினை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது பூர்த்தி செய்வதற்கு தனது அமைச்சு தயாராக உள்ளதாக பத்திக், கைத்தறி மற்றும் உள்நாட்டு சுதேச ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேககர ஜனாதிபதிக்கு  உறுதியளித்தார். தேசிய கொடி மற்றும் பௌத்த கொடிகளை வெளி நாடுகளில் உற்பத்தி செய்து இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் பெருந்தொகை அந்நியச் செலாவணி செலவிடப்படுகின்றுது.

 அடுத்த வருடம் முதல், தேவையான கொடிகளை உயர் தரத்துடன் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு பத்திக் மற்றும் கைத்தறித் துறையில் உள்ள உற்பத்தியாளர்கள் தயாராக உள்ளனர் என்பதனை அமைச்சர் ஜனாதிபதிக்கு  அறியத் தந்தார்.

 பத்திக் உற்பத்தியிலான தேசிய கொடியை நேற்று பிற்பகல்  ஜனாதிபதி  இல்லத்திற்கு வருகை தந்து அவரிடம்  கையளித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


தேசிய கொடி மற்றும் பௌத்த கொடிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இராஜாங்க அமைச்சு நடவடிக்கை: Reviewed by Author on November 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.