அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்தும் கடற் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதில் பாதிப்பு.

மன்னார் மாவட்ட மீனவர்கள் கடற்தொழிலை மேற்கொண்டு வருவதில் பல்வேறு பிரச்சினைகளக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.ஆனால் வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மன்னாரில் சுதந்திரமாக மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் மாவட்ட தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

 மன்னார் மாவட்ட மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய மீனர் ஒத்துழைப்பு பேரவையின் ஏற்பாட்டில் அதன் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குரூஸ் தலைமையில் இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் விசேட ஊடக சந்திக்கு இடம் இடம் பெற்றது. -இதன் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் மாவட்ட தலைவர் என்.எம்.ஆலம் அவ்வாறு தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்,,, கடந்த காலங்களில் மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்.

 ஆனால் தற்போது கொரோனா தொற்றின் காரணமாகவும் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தற்போது மன்னார் மாவட்ட மீனவர்கள் ஒட்டு மொத்தமாக சில பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அட்டை,சங்கு பிடிப்பதில் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அட்டை,சங்கு பிடிக்கம் தொழிலானது தற்போதைய பருவ காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தொழிளாக உள்ளது. ஆனால் குறித்த தொழில் தற்போது அரசினால் தடை செய்யப்பட்டுள்ளது.

 ஆனால் இந்த தொழிலை சிலின்டர் மூலம் அலங்கார மீன் பிடித்தல் என்ற வகையில் அதற்கான அனுமதி அரசியனால் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண மீன்பிடி தொழிலாளர்களுக்கு குறித்த தொழிலை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இதனால் அரசாங்கம் வட பகுதி மக்களை பாராமுகமாக பார்க்கின்றமை உண்மையாக உள்ளது. தென் பகுதியில் இருந்து இங்கு வந்த கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தமது தொழிலை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் உள்ளூர் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதில் தடுக்கப்பட்டுள்ளது.

 மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக குறித்த பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவே மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு கடற்தொழில் அமைச்சர் என்ற வைகயில் டக்ளஸ் தேவானந்தா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வட பகுதி மக்களினதும்,மீனவர்களினதும் பிரச்சினையை அமைச்சர் நன்கு அறிந்தவர். மத்திய அரசாங்கத்துடன் கதைத்து உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எமது மீனவர்களின் கோரிக்கையாகும். மீனவர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை கதைப்பதற்கு மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அல்லது மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு விசேட கூட்டம் நாத்தப்பட வேண்டும். 

 இதனால் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.தற்போது மீனவர்கள் பிடிக்கின்ற மீன்களின் விலை குறைவடைந்ர் உள்ளது. -ஒரு கிலோ மீன் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை செல்கின்றது. திட்டமிட்டு அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு மாயை என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன். காரணம் பேலிய கொடை என்கின்ற மீன் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட 'கொரேனா' வைரஸ் தொற்று மீன்களின் ஊடாக பரவப்பட்டுள்ளதாக மக்கள் நினைக்கின்ற அளவிற்கு அரசு ஒரு மாயையினை தோற்றிவித்து மீன்களின் விலையில் வீழ்ச்சி அடைந்துள்ளதற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. 

 எனவே மீன்கள் ஊடாக எவ்வித கொரோனா தொற்றுக்களும் ஈ ஏனைய பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்பதை இந்த அரசு மக்களுக்கு தெழிவு படுத்த வேண்டும். என அவர் மேலம் தெரிவித்தார். -குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் பள்ளிமுனை புனித லூசியா மீனவ கூட்டுறவுச் சங்க தலைவர் ஏ.ஏ.சில்வெஸ்ரர் றோஜ்,மன்னார் மாவட்ட சமாச தலைவர் எஸ்.ராஜா குரூஸ்,பேசாலை மீனவ கூட்டுறவுச் சங்க தலைவர் ஜே.ஜோகராஜ் குரூஸ் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
            



மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்தும் கடற் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதில் பாதிப்பு. Reviewed by Author on November 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.