அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டான் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்.

 நானாட்டான் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் 33 ஆவது அமர்வின் போது இன்று வெள்ளிக்கிழமை (6) விவாதிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தின் போது நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளர் உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டு பாதீடு சம்பந்தமான கூட்டத்தில் அனைவரின் ஒத்துழைப்புடனும் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏக மனதாக நிறை வேற்றப்பட்டுள்ளது. 

 இவ்விடையம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச் செல்வம் பரஞ்சோதி ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,,, எதிர் வரும் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு சபையின் உறுப்பினர்கள் அனைவரது ஆதரவோடும் வெற்றி பெற்றுள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 இந்த வருடத்தின் 70.6 மில்லியன் வரவில் நிர்வாக செலவு,அத்தியாவசிய சேவைகள் , கழிவு முகாமைத்துவம் , வீதி பராமரிப்பு , என மக்களின் நலன் சார்ந்த விடையங்களுக்காக 70.6 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வருடம் 'கொரோனா' தொற்று காரணமாக எமது சபைக்கு 25 வீதம் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. எதிர் வருடம் வருடம் (2021) எமது சபைக்கு அதிக வருமானங்கள் கிடைக்கும் வகையில் வேளைத்திட்டங்கள் முன்னெடுக்க உள்ளோம். எனவே 2021 ஆம் ஆண்டுக்க்கான பாதீடு வெற்றியாக அமைய ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். என நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச் செல்வம் பரஞ்சோதி மேலும் தெரிவித்தார்.



மன்னார் நானாட்டான் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம். Reviewed by Author on November 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.