மன்னாரில் இருந்து ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பகுதிகளுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய செல்பவர்களுக்கு புதிய நடை முறை அமுல்.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
-குறித்த கலந்துரையாடலின் போத நாட்டில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று வருகின்ற வாகன போக்கு வரத்து தொடர்பிலும் குறிப்பாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சான்றிதல் வைத்துள்ள சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் மாத்திரமே சென்று வர முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை(6) முதல் கொழும்பு மற்றும் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பகுதிகளுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்ய உள்ளவர்கள் அண்மையில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது மாவட்ட வைத்திய அதிகாரியுடன் தொடர்பு கொண்டு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
-எதிர் வரும் 13 ஆம் திகதியில் இருந்து குறித்த நடைமுறை அமுல் படுத்தப்பட உள்ளது.
-பி.சி.ஆர்.பரிசோதனை செய்யப்பட்ட சான்றிதல் இல்லாத எவரும் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பகுதிக்குச் சென்று பொருட்களை கொள்வனவு செய்யவோ அல்லது அங்கிருந்து உள் வரவோ முடியாது.
யாராவது இங்கே வருவதாக இருந்தால் தங்களுடைய இடங்களில் இருந்து பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையுடன் வர வேண்டும்.
-மேலும் கொரோனா விற்கான சர்வமத வழிபாடுகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.
-ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக எதிர் வரும் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரையான நேரப்பகுதியில் சர்வமத ஸ்தளங்களில் வழிபாடுகள் இடம் பெற உள்ளது.
குறிப்பாக மடு திருத்தலம்,திருக்கேதீஸ்வரம், மன்னார் நகர பள்ளிவாசல், மன்னார் பகுதியில் உள்ள விகாரை போன்ற வணக்கஸ்தலங்களில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே மக்கள் குறித்த நேரத்தில் தமது வீடுகளில் தீபங்களை ஏற்றி கொரோனா தொற்றில் இருந்து அனைவரும் விடுபடுவதற்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.என அனைவரையும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் இருந்து ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பகுதிகளுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய செல்பவர்களுக்கு புதிய நடை முறை அமுல்.
Reviewed by Author
on
November 06, 2020
Rating:

No comments:
Post a Comment