பொதுத் தேவைக்கு ஒதுக்கப்பட்ட காணி தனி நபரால் அபகரிப்பு! ஏ9 வீதியில் எதிர்ப்பு போராட்டம்
இதில் பால் பண்ணை மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் என பல்வேறு தேவைகளுக்கும் காணிகள் ஒதுக்கப்பட்டதாகவும் இதில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியினை தனிநபர் ஒருவர் அடாத்தாக பிடித்துள்ளார்.
அத்துடன் அந்த காணிகளில் அபிவிருத்தி வேலைகளையும் முன்னெடுத்து வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10 மணிக்கு ஏ9 வீதியின் கரந்தாய் பகுதியில் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் போது அபகரிக்கப்பட்ட காணியை மீளப்பெற்றுத் தருமாறு கோரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் இணைப்பாளர் கோ.றுசாங்கனிடம் குறித்த கோரிக்கை அடங்கிய மகஜர் மக்களால் கையளிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேவைக்கு ஒதுக்கப்பட்ட காணி தனி நபரால் அபகரிப்பு! ஏ9 வீதியில் எதிர்ப்பு போராட்டம்
Reviewed by Author
on
February 12, 2021
Rating:
Reviewed by Author
on
February 12, 2021
Rating:


No comments:
Post a Comment