மன்னார் அன்பு சகோதரர் இல்லத்தில் தொடர் திருட்டு.
குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த அன்பு சகோதரர் இல்லம் மன்னாரில் கடந்த 20 வருடங்களாக இயங்கி வருவதோடு, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சிறுவர்களை பராமறித்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த இல்லத்தில் தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் திருட்டுச் சம்பவத்தினால் குறித்த இல்லத்தில் உள்ள மாணவர்களும், இல்ல நிர்வாகத்தினரும் கவலையடைந்துள்ளனர்.
இவ்வாறான திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் அன்பு சகோதரர் இல்லத்தில் தொடர் திருட்டு.
Reviewed by Author
on
May 28, 2021
Rating:

No comments:
Post a Comment