கொரோனா தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய் பிரசவத்தின் போது மரணம்!
அவர் பிரசவத்திற்காக நிகவெரடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குருணாகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் வலிப்பு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பிரசவத்திற்காக அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, வலிப்பு அதிகரித்ததால் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், சிசுவினை வைத்தியர்கள் காப்பாற்றியுள்ளனர்.
சிசு பூரண உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சந்தன கென்தகமுவ மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய் பிரசவத்தின் போது மரணம்!
Reviewed by Author
on
May 15, 2021
Rating:

No comments:
Post a Comment