யாழ்ப்பாணம் - வடமராட்சி கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 11 மீனவர்கள் கைது
கடலட்டை தொழில் இடம்பெறுவதாக கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தொழிலில் ஈடுபட்டவர்களிடம் அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை.
அதனால் சட்டத்துக்குப் புறம்பாக கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் 11 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் தொழிலுக்குப் பயன்படுத்திய 4 படகுகளும் கைப்பற்றப்பட்டன.
மீனவர்கள் 11 பேரையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 11 மீனவர்கள் கைது
Reviewed by Author
on
May 15, 2021
Rating:

No comments:
Post a Comment