தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை மீண்டும் அமுல் – பொலிஸார் முக்கிய அறிவிப்பு
இறுதி இலக்கமாக 1,3,5,7,9 உள்ளவர்கள் ஒற்றை நாட்களில் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என அஜித் ரோஹண அறிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, அடையாள அட்டை இல்லாதவர்கள் கடவுச்சீட்டு அல்லது வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பயன்படுத்த முடியும் என்றும் அறிவித்துள்ளார்.
வேலைக்கு செல்பவர்கள், அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்கள் அல்லது மருத்துவ சேவைகளை வாங்குபவர்களுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தாது என்றும் அவர் கூறினார்.
வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அல்லது மருத்துவ தேவைக்காக வீட்டை விட்டு வெளியேற விரும்புவோருக்கு இது பொருந்தும் என்றும் அதுவும் ஒரு வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே செல்ல முடியும் என்றும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொருவரும் அவர்களின் அடையாள அட்டையை கொண்டு செல்வது அத்தியாவசியம் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை மீண்டும் அமுல் – பொலிஸார் முக்கிய அறிவிப்பு
Reviewed by Author
on
May 12, 2021
Rating:
Reviewed by Author
on
May 12, 2021
Rating:


No comments:
Post a Comment