இராணுவத்தினரால் யாழில் கிருமி தொற்று நீக்கும் பணி முன்னெடுப்பு
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் ராணுவத்தின் 51-வது படைப்பிரிவு தளபதியின் நெறிப்படுத்தலில் ராணுவத்தின் 512 வது பிரிகேட் படைப்பிரிவினரால் யாழ்ப்பாண நகரப் பகுதி நீர் ஊற்றி கழுவப்பட்டு கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
யாழ் நகரில் பொது மக்கள் அதிகமாக ஒன்று கூடும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி மற்றும் ஆஸ்பத்திரி வீதி ஆகிய வீதிகள் நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் அண்மைய நாட்களில் தொற்று பரலை கட்டுப்படுத்தும் முகமாக அனைத்து இடங்களிலும் ராணுவத்தினரால் இவ்வாறான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தினரால் யாழில் கிருமி தொற்று நீக்கும் பணி முன்னெடுப்பு
Reviewed by Author
on
May 12, 2021
Rating:
Reviewed by Author
on
May 12, 2021
Rating:


No comments:
Post a Comment