ரிஷாத் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்துஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டனர்- சஜித்
ரிசாத் பதியுதீனாக இருந்தாலும் அவர் ஏதேனும் குற்றம் செய்திருந்தால் குற்றச்சாட்டை முன்வைத்து அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றே நாங்கள் கூறுகின்றோம், இந்த இடத்தில் யார் என்பது எங்களிற்கு முக்கியமில்லை ஏதேனும் தவறு நடந்திருந்தால் அது தொடர்பாக சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு பாரிய சவாலை ஏற்படுத் தியுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத் திற்கு ஆதர வளித்த போதே ரிஷாத் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து விலக் கியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது கட்சியின் உறுப்பினர்கள் ஆகியோர் கூட்டணிக்குள் இருக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஹரின் பெர்ணான் டோவுடன் இன்று வருகை தந்த சஜித் பிரேமதாச ஊடகங்க சந்திப்பில் மறைமுகமாகக் தெரிவித் துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரிஷாத் கட்சியைச் சேர்ந்த பலரும் 20ஆவது திருத்தம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் கூட்டணியின் தீர்மானங்களை எதிர்த்துச் செயற் பட்டதால் அவர்களைக் கூட்டணியிலிருந்து விலக்கியுள்ளதாக சஜித் மேலும் தெரிவித்துள்ளார்.
ரிஷாத் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்துஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டனர்- சஜித்
Reviewed by Author
on
July 29, 2021
Rating:
Reviewed by Author
on
July 29, 2021
Rating:


No comments:
Post a Comment