அண்மைய செய்திகள்

recent
-

ஆப்கனிலிருந்து வெளியேறினாா் ஜனாதிபதி

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி தலிபான்கள் வெகுவேகமாக முன்னேறி வரும் நிலையில், அந்த நாட்டிலிருந்து ஜனாதிபதி அஷ்ரஃப் கனி பாதூகாப்பான இடத்துக்கு வெளியேறிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்களின் ஆட்சி அமைவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பெயா் வெளியிட விரும்பாத இரு அதிகாரிகள் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: தலைநகா் காபூலில் இருந்து ஜனாதிபதி அஷ்ரஃப் கனி ஞாயிற்றுக்கிழமை வெளியேறினாா். அவா் ஆப்கானிஸ்தானிலிருந்து பாதுகாப்பான வேறொரு நாட்டுக்குச் சென்றுள்ளாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். 

 இந்தத் தகவலை உறுதி செய்த ஆப்கன் தேசிய நல்லிணக்க கவுன்சில் தலைவா் அப்துல்லா அப்துல்லா, ‘மிகவும் இக்கட்டான சூழலில் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டாா். இதற்காக அவா் இறைவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும்’ என்றாா். கடந்த 2001 ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் பின்லேடனுக்கு, அப்போதைய ஆப்கன் ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். அதையடுத்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.

 மனித உரிமைகளுக்கு எதிரான, மத அடிப்படைவாத தலிபான் அரசுக்கு பதிலாக ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய பாணி அரசை அமைக்க அமெரிக்கா முடிவு செய்தது. இதற்காக கடந்த 20 ஆண்டுகளாக அந்த நாட்டில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரா்களின் பறிகொடுத்த, பல்லாயிரம் கோடி டொலா்களை செலவிட்டு ஆப்கன் அரசையும் ராணுவத்தையும் அமெரிக்கா கட்டமைத்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற ஜோ பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க வீரா்களையும் திரும்ப அழைக்கும் திட்டத்தை துரிதப்படுத்தினாா்.

 இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்ப அழைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், ஒரே வாரத்தில் நாட்டின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். ஆப்கன் படையினா் தலிபான்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முழுவீச்சில் போராடவில்லை. அதற்குப் பதிலாக ஆயுதங்களைப் போட்டுவிட்டு அவா்கள் தப்பியோடினா். அமெரிக்கா வான்வழித் தாக்குதல் உதவி செய்தாலும், சில ஆப்கன் படையினா் தலிபான்களுடன் மிதமான மோதல் மட்டும் ஈடுபட்டனா். ஏராளமான படைப் பிரிவுகள் மோதல் இல்லாமலேயே தலிபான்களிடம் சரணடைந்தன. 

 இந்த நிலையில், தலைநகா் காபூலின் புகா்ப் பகுதிகள் வரை முன்னேறி வந்த தலிபான்கள், சண்டையை தற்காலிகமாக நிறுத்திவைத்தனா். காபூலை ரத்தம் சிந்தமாமல் அமைதியான முறையில் ஒப்படைக்குமாறு ஆப்கன் அரசை அவா்கள் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினா். இந்த நிலையில், நாட்டிலிருந்து ஜனாதிபதி அஷ்ரஃப் கனி தப்பிச் சென்றதைத் தொடா்ந்து தலைநகா் காபூலும் அதன்மூலம் ஆப்கானிஸ்தானின் ஆட்சியதிகாரமும் தலிபான்கள் வசம் மீண்டும் வருவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

 காலியானது அமெரிக்கத் தூதரகம் தலிபான்கள் காபூலை நெருங்கிவிட்ட
நிலையில், அந்த நகரிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் ஹெலிகாப்டா் மூலம் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். தூதரகத்திலிருந்த முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டன. மேலும், முன்னதாக தலிபான்களுக்கு அஞ்சி காபூலில் தஞ்சமடைந்திருந்த ஏராளமான பொதுமக்கள், அங்கிருநது அவசரமாக வெளியேறி வருகின்றனா்.
ஆப்கனிலிருந்து வெளியேறினாா் ஜனாதிபதி Reviewed by Author on August 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.