அண்மைய செய்திகள்

recent
-

ஈக்குவடோரில் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் காரணமாக 120 பேர் பலியாகியுள்ளனர் – பலர் தலை துண்டிக்கப்பட்டு கொலை

ஈக்குவடோரில் சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மோசமான படுகொலை என வர்ணித்துள்ள அதிகாரிகள் ஐவர் தலைதுண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர். 

சிறைச்சாலை போர்க்களமாக காணப்படுவதையும் பல உடல்கள் காணப்படுவதையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. கைதிகள் கத்திகள் துப்பாக்கிகள் குண்டுகளை பயன்படுத்தி மோதலில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி பாஸ்டகோ புவானகோ சிறையின் கழிவுநீர் வெளியேறும் குழாய்களில் பல உடல்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். மருத்துவமனையின் பிரதே அறைக்கு வெளியே கண்ணீருடன் கைதிகளின் குடும்பத்தவர்கள் காத்திருக்கின்றனர்.

 அவர்கள் தங்கள் குடும்பத்தவர்கள் எவ்வாறு தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்பதை விபரித்துள்ளனர். மெக்சிக்கோவில் செயற்படும் பலம்பொருந்திய போதைப்பொருள் கும்பலே சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்திற்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தை அடக்குவதற்காக 400 பொலிஸாரை பயன்படுத்தியதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



ஈக்குவடோரில் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் காரணமாக 120 பேர் பலியாகியுள்ளனர் – பலர் தலை துண்டிக்கப்பட்டு கொலை Reviewed by Author on September 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.