`தலைக்கேறிய போதை; முற்றிய வாக்குவாதம்; நண்பனை ஓட, ஓட வெட்டிக்கொன்ற இளைஞர்!'
அப்போது, போதையில் இருவருக்குமிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால், ஒருவரை ஒருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டுள்ளனர். ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றி இருவரும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். அதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இருவரையும் பிரித்துச் சமாதானப்படுத்தித் தனித் தனியே வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
முருகன் தனது வீட்டிற்குச் சென்றுவிட்ட நிலையில், சுபாஷ் மட்டும் ஆத்திரம் தணியாமல் வீதிகளில் பித்துப் பிடித்தவர் போல் சுற்றித் திரிந்திதாகச் சொல்கிறார்கள்.
முருகன் தன்னை அவதூறாகப் பேசித் தாக்கியதால், கடும் கோபத்திலிருந்த சுபாஷ் முருகனின் வீட்டுக்குச் சென்றவர், சமாதானம் பேசுவது போல் அவரை தெருவிற்கு அழைத்துள்ளார். நண்பனை நம்பி முருகனும் தெருமுனைக்குச் சென்றிருக்கிறார். அப்போது, சுபாஷ்தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகனைச் சரமாரியாகக் தாக்கியுள்ளார். அதைச் சற்றும் எதிர்பாராத முருகன் நிலைதடுமாறி கீழே விழுந்து, எழுந்து ஓடியுள்ளார்.
ஆனால், அப்போதும் ஆத்திரம் தணியாத சுபாஷ் விரட்டிச் சென்று தலை மற்றும் கழுத்து பகுதியில் பலம் கொண்டு வெட்டியுள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே முருகன் உயிரிழந்தார்.
ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலைச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக புல்லரம்பாக்கம் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதைக் கண்டு பயந்து போன கொலையாளி சுபாஷ் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த புல்லரம்பாக்கம் போலீஸார், முருகனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்கு பதிவு செய்து சுபாஷை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், சுபாஷ் சந்திரபோஸ் நேற்று காலை காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீஸார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
`தலைக்கேறிய போதை; முற்றிய வாக்குவாதம்; நண்பனை ஓட, ஓட வெட்டிக்கொன்ற இளைஞர்!'
Reviewed by Author
on
October 04, 2021
Rating:

No comments:
Post a Comment